முதலில் சூதாட்டம் என்றால் என்ன சூதாட்டம் என்பது நாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற நினைப்பது மேலும் குறுக்கு வழியைக் கையாள்வது அதுதான் சூதாட்டம்...
கிரிப்டோ ஒரு சிறந்த தொழில்... முதலில் தொழில் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. தொழில் என்பது என்னவென்றால் நாம் ஒரு முதலீடு செய்கிறோம் அதில் லாபம், நட்டம் என அனைத்தும் வரும் மேலும் நாம் வாழ்க்கை சீராக செல்வதற்கு தேவையான வருமானம் வருகிறதா என்பதுதான் தான் தொழில்...
மேலும் ஒரு தொழில் என்றால் அதற்கான முதலீடு தேவைப்படும்.. அந்த முதலீடு தொழிலுக்கு முதலீடு செய்வதன் மூலம் நாம் அதில் வேலையை செய்வதால் நமக்கு வருமானம் வரும் .
ஆனால் இங்கு வருபவர்கள் தாங்கள் செய்த முதலீட்டுக்கு நூறு மடங்கு இருநூறு மடங்கு வருமானம் வேண்டும் அதுவும் குறைந்த காலத்தில் வேண்டும் என்று வருகிறார்கள்..
அப்படி வரும்பொழுது அது சூதாட்டமாக பார்க்கப்படுகிறது.
மேலும் அவர்கள் குறைந்த முதலீட்டைக் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாந்து திரும்பி சென்று அனைவரிடமும் இது ஒரு பித்தலாட்டம் என்று சொல்கிறார்கள்..
நாம் ஒரு தொழில் செய்யும் பொழுது அதை முழுவதுமாக கற்றுக்கொண்டு பிறகு முதலீடு செய்ய வேண்டும். பிறகு அதில் நாம் லாபத்தை எதிர்பார்க்க வேண்டும் ,அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்..
நாம் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி கற்றுக் கொள்ளாமல் பணம் வரும் என்று யாரோ சொல்வதை நம்பி உள்ளே வந்து பணத்தை முதலீடு செய்து என்ன ஏது என்று தெரியாமல் இழந்து விட்டு செல்வதால் நாம் கிறிப்டோவை நம்பகம் இல்லாத சூதாட்டம் என்று கூறிக்கொள்கிறோம் ...
மேலும் ஒரு தொழில் என்றால் என்ன முதலீடு செய்கிறோம் அதற்கு என்ன லாபம் வரும் என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் நாம் பெட்டி கடை வைத்தால் அதில் என்ன லாபம் வரும் அதைத்தான் எதிர்பார்க்க வேண்டும் ஆனால் கிரிப்டோவுக்கு வருபவர்கள் பெட்டிக்கடை முதலீட்டை வைத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட் லாபத்தை எதிர்பார்க்கிறார்கள் நமக்கு சூப்பர் மார்க்கெட் லாபம் வேண்டுமென்றால் நாம் சூப்பர் மார்க்கெட் போடுவதற்கான முதலீட்டை முதலீடு செய்யவேண்டும் இதை புரிந்து கொண்டாலே நீங்கள் கேட்டவை சூதாட்டம் அல்ல தொழில் என்று உணர்ந்து கொள்வீர்கள்....
No comments:
Post a Comment